ஒன்று தான் இருந்தது.. இப்போ அதுவும் போச்சு.!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த கால கட்டத்தில் ஜெயா டிவி அதிமுக வசம் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது ஜெயா டிவி தினகரன் வசம் சென்றது. இதனால் அதிமுகவுக்கு என இருந்த ஒரு தொலைக்காட்சி, தினகரன் வாசம் உள்ளது.

அதன் பிறகு அதிமுகவினர் நியூஸ் ஜெ என்ற தொலைக்காட்சியை தொடங்கினர். தற்போது திடீரென ஜெயா டிவி அதிமுகவிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு வருகிறது. இதற்கு காரணம் என்னவென்று அரசியல் வட்டாரங்களில் கூறுகையில் தினகரன் ஆதரவாக இருந்து செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்த அடுக்கு விலகி திமுகவில், ஒரு சில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து தான் என்று கூறுகின்றனர்

தற்போது ஜெயா டிவி அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதால் தினகரன் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அதிமுக வசம் நியூஸ் ஜெ உளது. தற்போது ஜெயா டிவியும் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளதால் தற்போது இரண்டு தொலைக்காட்சிகள் அதிமுக ஆதரவாக செயல்பட்டு வருகிறது.