இன்னும் மூன்று ஆண்டுகள் தோனி தான்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

உலகக் கோப்பை போட்டி முடிந்ததும் இந்திய அணியின் மூத்த ஆட்டக்காரர் மகேந்திர சிங் தோனி எப்போது ஓய்வு பெறுவார்? என்ற பேச்சுதான் தற்பொழுது ஹாட் டாப்பிக்காக இந்திய ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் இதுவரை அவருடைய எந்த முடிவையும் அவர் வெளியிடவில்லை. இந்திய அணி நிர்வாகத்திற்கும் அவர் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் இந்த தொடருடன் ஒய்வு அறிவிப்பார், அடுத்த தொடருடன் ஓய்வு அறிவிப்பார், இன்னும் சில மாதங்கள் விளையாடுவார் அடுத்த வருடம் 2020, 20 ஓவர் உலக கோப்பை வரை விளையாடுவார் என பல யூகங்கள் எழுதி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டி முடிந்த அன்றே அடுத்த வருடம் நிச்சயமாக விளையாடுவேன் என்று தோனி அறிவித்திருந்தார். இன்று அதனை உறுதி செய்யும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் சென்னை அணியுடனான தோனியின் ஒப்பந்தம் இன்னும் மூன்று ஆண்டுகள் நீடிக்கிறது. அதுவரை சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் ஒருவேளை அவர் ஓய்வு பெற்றாலும், சென்னை அணிக்காக அவர் இன்னும் மூன்று ஆண்டுகாலம் விளையாடுவார், அதுவும் ஒரு கேப்டனாக விளையாடுவார் என்று கூறியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாகும்.