மனைவியின் பொலிஸ் சீருடையை திருடிய கணவன்!

மனைவியின் பொலிஸ் சீருடையை திருடி காதலியுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கணவனை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர ராய். இவருடைய மனைவி தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் ஜிதேந்திர ராயின் மனைவி பொலிஸார் நிலையத்தில், தன்னுடைய கணவன் வீட்டில் இருந்து வெளியேறி மஸ்கீட் சங்கீதா என்கிற பெண்ணுடன் வசித்து வருவதாக புகார் கொடுத்தார்.

அதன்பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, ஜிதேந்திர ராய் தன்னுடைய மனைவியின் பொலிஸ் சீருடையை திருடி சங்கீதாவிற்கு கொடுத்துள்ளார்.

மேலும், போலியான அடையாள அட்டை தயார் செய்து காதலியுடன் சேர்ந்து கொள்ளைச்சம்பவங்களில் ஈட்டுபட்டு வந்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் இருவரையும் கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.