நடிகர் சூர்யாவை சாடிய பாஜக பிரமுகர்.!

மத்திய அரசு அறிவித்த புதிய கல்வி வரைவு கொள்கையை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகர் சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது மூன்று வயதிலேயே மூன்று மொழி திணிக்கப்படுகிறது என்று முதல் தலைமுறை மாணவர்களை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் எல்லோரும் அமைதியாக இருந்தால் இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்து வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளையும் மாற்றங்களையும் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்று சேர்ந்து உரக்கச் சொல்லுங்கள் என நிகழ்ச்சியில் பேசியிருந்தார் இந்நிலையில் புதிய கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என பாரதிய ஜனதா தேசியச் செயலாளராக எச் ராஜா விமர்சித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எச் ராஜா திமுக எம்பி கனிமொழி இந்தி படிக்கும் போது மக்கள் படிக்கக் கூடாதா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி படிக்க கூடாது எனக் கூறும் திமுகவினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.