சிறுமியை உயிருடன் கொளுத்திய தாயார்!

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் வளர்ப்பு தாயாரால் கொடுமைப்படுத்தப்பட்டு குப்பைத் தொட்டியில் வைத்து உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

ஜோர்ஜியா மாகாணத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டிஃப்பனி மோஸ், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

மாகாணத்திலேயே இவர் மட்டுமே பெண் மரண தண்டனை கைதியாக தற்போது உள்ளார்.

இமான் மோசின் முன்னாள் மனைவிக்கு பிறந்தவர் 10 வயதாகும் இமானி மோஸ். டிஃப்பனியை திருமணம் செய்த பின்னர் சிறுமி இமானி மோசும் இவர்களுடனையே வசித்து வந்துள்ளார்.

ஆனால் சிறுமி இமானி மீது எந்த ஒட்டுதலும் இன்றி, அவரை துன்புறுத்துவதையே வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார் டிஃப்பனி மோஸ்.

ஒருகட்டத்தில் நாளுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு வழங்கியுள்ளார் சிறுமி இமானிக்கு.

இந்த தகவல்கள் தெரிந்தும் தந்தையான இமான் மோஸ் கண்டுகொள்ளவில்லை என்பது மட்டுமின்றி, மனைவிக்கு ஆதரவாக மகளை துன்புறுத்தவும் செய்துள்ளார்.

பல நாட்கள் உணவின்றி வாடிய இமானி, அவரது கழிவுகளின் மீதே படுத்து தூங்கியுள்ளார்.

ஆனால் டிஃப்பனியின் எஞ்சிய பிள்ளைகள் வேளா வேளைக்கு உணவருந்தி ஆரோக்கியமாக இருந்துள்ளது.

இதனிடையே 2013 அக்டோபர் மாதம் 911 எண்ணுக்கு அழைப்பு விடுத்த இமான் தமது 10 வயது மகள் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. இமானின் குடியிருப்பு அருகே உள்ள குப்பைத் தொட்டியில் மொத்தமாக எரிந்த நிலையில் சிறுமி இமானியின் சடலம் மீட்கப்பட்டது.

இந்த வழக்கில், சொந்த பிள்ளைகளுடன் தலைமறைவான டிஃப்பனியை பொலிசார் கைது செய்தனர்.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் டிஃப்பனிக்கு மரண தண்டனையும், மகளின் கொலைக்கு உடந்தையாக இருந்த இமானுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மாகாண நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.