காதல் மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!

குஜராத் மாநிலத்தில் காதல் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மிஷ்பா என்கிற இளம்பெண் கடந்த 3 வருடங்களுக்கு முன் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்று போது ஷோயிப் என்கிற இளைஞரை சந்தித்துள்ளார்.

நண்பர்களாக பழகிய இருவரும் நாளடைவில் காதலிக்க துவங்கியுள்ளனர். 3 வருடங்கள் காதலித்து வந்தது வீட்டிற்கு தெரியவந்ததை அடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களிலே கணவன் – மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், ஷோயிப் தான் பார்த்து வந்த பெயிண்டர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால், மிஷ்பாவை வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வருமாறு வற்புறுத்த ஆரம்பித்துள்ளார்.

இதனால் அடிக்கடி வீட்டிற்கு செல்லும் சமயத்தில் எல்லாம் கணவன் துன்புறுத்துவதாக மிஷ்பா தன் தாயிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மிஷ்பா, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய தாய் வீட்டாருக்கு ஷோயிப் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பாத மிஷ்பாவின் தாய் ஷெய்கன் (35), ஷோயிப் தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், ஷோயிப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.