மாணவியை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய ஆசிரியர்…

தமிழகத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர் பாலாஜி. இவர் வேதியியல் ஆசிரியரும் கூட.

இந்த பள்ளியில் படித்த ப்ளஸ் 2 மாணவியை 5 மாதங்களுக்கு முன்பு பாலாஜி பள்ளி வேதியியல் ஆய்வகத்தில் வைத்து பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதனை வீடியோவாகவும் எடுத்து, அதை மாணவியிடம் காட்டி தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் அந்த மாணவி இப்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இது குறித்த அளிக்கப்பட்ட புகாரில் தலைமறைவாக இருந்த பாலாஜியை பொலிசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் மாணவியின் கர்ப்பத்தை கலைக்க அவரது தாய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் கர்ப்பத்தை கலைப்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.