மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகும் தமிழன்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலக இந்திரஜித் குமாரசுவாமி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல தனிப்பட்ட காரணங்களினால், தொடர்ந்தும் தன்னால் ஆளுநராக பொறுப்பு வகிக்க முடியாதுள்ளதாகவும் இதனால், பதவியில் இருந்து விலக எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு அமைய இந்திரஜித் குமாரசுவாமி எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகலாம் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் பல முறை அவர் பதவியில் இருந்து விலக விரும்பியதுடன் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய தொடர்ந்தும் பதவியில் இருந்து வருகிறார்.

இம்முறை அவர் கட்டாயம் பதவியில் இருந்து விலகிவிடுவார் என பேசப்படுகிறது.