பார்க்க அழகாக இருந்த பெண் செய்த மோசமான செயல்…

தமிழகத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதத்தில் நின்று கொண்டிருந்த இரு பெண்களை பொலிசார் சோதனை செய்ததில் அவர்கள் ஏராளமான கொலுசுகளை திருடிவைத்திருந்தது தெரியவந்துள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியில் காவல்நிலையம் எதிரே நகைக்கடை வைத்து நடத்தி வருபவர் சந்தோஷ்குமார். இவருடைய கடையில் வெள்ளிக்கொலுசு வாங்க 2 பெண்கள் வந்தனர்.

பல்வேறு விதமான கொலுசுகளை அவர்கள் வாங்கி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கடை உரிமையாளரின் கவனம் திசை திரும்பிய நேரத்தில், 15 ஜோடி வெள்ளிக்கொலுசுகளை 2 பெண்களும் திருடி பைகளில் மறைத்து வைத்துள்ளனர்.

பின்னர் ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசுகளை மட்டும் காசு கொடுத்து வாங்கிச்சென்றனர்.

இந்நிலையில் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் பெண் பொலிசார் இருவரையும் சோதனை செய்ததில் அவர்கள் அணிந்திருந்த உடையில் 15 ஜோடி வெள்ளிக்கொலுசுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் அவர்களிடம் விசாரித்த போது அனைத்து உண்மைகளும் தெரிந்தது.

அவர்களின் பெயர் ஜான்சிராணி (32) மற்றும் சாந்தி (50) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து குறித்த நகைக்கடைக்கு சென்ற பொலிசார் நடந்தத்தை கூறியபின்னரே உரிமையாளருக்கு கொலுசு திருடு போனது தெரியவந்தது.

அந்த கொலுசுகளின் மதிப்பு ரூ.51 ஆயிரம் என்பது தெரியவந்துள்ள நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.