படுக்கை அறையில் நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி!

பிரித்தானியாவை உலுக்கிய நிறைமாத கர்ப்பிணி கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இக்கொலை சம்பவம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை காலை, பெக்காமின் பார்க் சாலையைச் சேர்ந்த 25 வயதான ஆரோன் மெக்கென்சி மீது குற்றம் சாட்டப்பட்டதாக ஸ்காட்லாந்து யார்ட் பொலிசார் கூறினர்.

கைது செய்யப்பட்ட மெக்கென்சி மீது தாக்குதல் ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த யூன் 29ம் தேதி, 26 வயதான கெல்லி என்ற நிறைமாத கர்ப்பிணி, தோர்ன்டன், ரேமேட் அவென்யூவில் உள்ள அவரது வீட்டின் படுக்கை அறையில் கொல்லப்பட்டார்.

கெல்லி கொல்லப்பட்ட நிலையில் மருத்துவர்கள் உதவியுடன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கெல்லி குடும்பத்தினர் ரிலே என பெயர் வைத்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, ரிலே சில நாட்களுக்குப் பிறகு ஜூலை 3ம் தேதி அன்று மருத்துவமனையில் இறந்தார்.

இக்கொலை சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் முன்பு கைது செய்யப்பட்டனர். ஒருவர், 37 வயது நபர், மேலதிக நடவடிக்கை இல்லாமல் விடுவிக்கப்பட்டார், இரண்டாவது, 29 வயது நபர், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது, கெல்லி கொலை சம்பவத்தில் புதிய திருப்பமாக 25 வயதான ஆரோன் மெக்கென்சி மீது குற்றம் சாட்டப்பட்டு ஸ்காட்லாந்து யார்ட் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.