என்னை படுக்கைக்கு அழைத்தனர்.! பிரபல தொகுப்பாளினி பகீர் தகவல்.!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள படுக்கைக்கு அழைத்தார்கள் என பிரபல தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி புகார் தெரிவித்துள்ளார். அதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாலியல் அழைப்பு விடுத்ததால் அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் 13 வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தமிழில் 3 வது சீசன் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது. இதில் 3 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

தெலுங்கில் நடைபெற உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நடைபெறும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறவர்களை பற்றி முகுந்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே நிலவி வந்தது. நிகழ்ச்சியில் போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டது நிகழ்ச்சி குழு. இதையடுத்து தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அந்த அழைப்பிற்காக தன்னை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாகவும் பிரபல டிவி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.