அஞ்சலியின் ஹீரோ இப்போ அதுல்யாவின் ஹீரோவாகி போனாரா.?

“கற்றது தமிழ்” என்ற ஜீவா படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார் நடிகை அஞ்சலி. இதனை தொடர்ந்து, நடிகை அஞ்சலி பல படங்களில் நடித்து வந்தார். மேலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.

தமிழில், வெளியாகிய எங்கேயும், எப்போதும் படத்தில் ஜெயுடன் நடிகை அஞ்சலி இணைந்து நடித்திருப்பார். இவருக்கும் கெமிஸ்ட்ரி மிகவும் ஒத்து போனது. இந்நிலையில், இது குறித்து ரசிகர்கள் பலர் இருவரும் காதலிப்பதாக தெரிவித்தனர்.

ஆனால், இதனை இருவருமே இல்லை என மறுத்தனர். இந்நிலையில் நடிகை அஞ்சலி, செய்தியாளர்களிடம் பேசிய போது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “தன்னுடன் நடித்த பலருக்கு திருமணம் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

பின்னர், இன்னும் திருமணம் ஆகாமல் ஜெய் மட்டும்தான் இருக்கிறார். எப்பொழுது திருமணம் நடக்கும் என தெரியவில்லை, அப்படி நடந்தால் ஒரு தமிழரை தான் நான் மணந்து கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார். ஜெய்யின் ரசிகர்களுக்கு யாரை சொல்கிறார் என குழம்ப செய்துள்ளது.

இந்நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி வரும் கேப்மாரி என்ற படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படம் வெளிவராத நிலையில் அடுத்த அறிமுக இயகுனர் ஒருவரின் பட்டத்தில் இருவரும் கமிட்டாகியுள்ளனர்.

இதில் ஜெய்யின் சிபாரிசில் தான் அதுல்யா ஒப்பந்தமாகி இருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த வதந்தி எங்கே போய் முடிய போகின்றது என சினி பீல்டனில் உள்ளவர்கள் பேசி வருகிறார்களாம்.