வருங்கால மனைவியை எரித்துக்கொலை செய்த இளைஞர்!

தன்னுடைய காதலி வேறு ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த காதலன், உயிருடன் தீ வைத்து எரித்துக்கொலை செய்துள்ள சம்பவம் உக்ரைன் நாட்டில் நடந்துள்ளது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த அனஸ்தேசியா கோவலேவா (22) என்கிற இளம்பெண்ணுக்கு, அவருடைய காதலன் விட்டலி சாய்கோவ்ஸ்கி (28) என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தன்னுடைய காதலி வேறு ஆண்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த விட்டலி , 2ம் திகதியன்று அனஸ்தேசியாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அங்கிருந்து கிளம்பினாள் காதலனின் கோபம் குறைந்துவிடும் என நினைத்த அனஸ்தேசியா, வேகமாக புறப்பட்டுள்ளார்.

ஆனால் இன்னும் அதிகமாக கோபமடைந்த விட்டலி, வெளியில் சென்று பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். வீட்டு கதவின் ஓரத்திலேயே நின்று கொண்டிருந்த விட்டலி, அனஸ்தேசியா வந்ததும் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

மளமளவென உடல் முழுவதும் தீ பற்றியதால், அனஸ்தேசியா கதற ஆரம்பித்துள்ளார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத விட்டலி, தன்னுடைய ஆடையை கழற்றி தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் அனஸ்தேசியா உடலில் 90 சதவீத காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனஸ்தேசியா, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து விட்டலியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.