நாடக காமகாதல் கொடூரன்களுக்கு நாடாளுமன்றத்தில் பாஸ் ஆன மசோதா.!!

இந்தியாவில் பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பல குற்றங்கள் அரங்கேறி வருகிறது. இதுமட்டுமல்லாது பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் கடத்தல்., நாடக காதல் என்று பல விதமான பெயர்களின் கீழ் நடைபெற்று வருகிறது.

அவ்வாறு நடைபெறும் குற்றங்கள் தொடர்கதையாகியுள்ள நிலையில்., குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து காக்கும் பொருட்டு பாதுகாப்பு சட்டத்தில் சிறுவர் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுக்க அபராதம் மற்றும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதனை போன்று கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் குழந்தைகள் மீதான குற்றங்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாது குழந்தைகளின் கண்ணியம்., பாதுகாப்பும் உறுதிசெய்யப்படுத்தலுக்கு இது போன்ற சட்டங்கள் அவசியமாகிறது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில்., தற்போது நடைமுறையில் உள்ள போக்ஸோ சட்டத்தில் 4 ஆம் பிரிவு., 5 ஆம் பிரிவு மற்றும் 6 ஆம் பிரிவில் மாற்றம் செய்யப்பட அமைச்சரவை ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதனைப்போன்று குழந்தைகள் ஆபாச படங்கள் பார்த்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதற்கு உரிய சட்டத்தில் 14 வது பிரிவு மற்றும் 15 ஆவது பிரிவில் மாற்றம் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.