தோனியின் அவுட் நடுவரின் தவறு? வெளியான உண்மை.!!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் நேற்று முன் தினம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் தொடங்கி மழை காரணமாக நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுமாரான இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். ஆடுகளம் ஸ்விங் ஆனதால் டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை அற்புதமாக வீசினர்கள்.

இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள முடியாத ரோகித் சர்மா, கோலி 1 ரன்னில் வெளியேற, லோகேஷ் ராகுல் அதே 1 ரன்னில் தேவையில்லாத பந்தினை தொட்டு ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் நீஷமின் கண்மூடித்தனமான கேட்சில் ஆட்டமிழக்க, இந்தியா 24 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதைத்தொடர்ந்து ரிஷப் பந்த் உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணிக்கு நம்பிக்கையை உருவாக்கியது. ஆனால் ரிஷப் பந்த் 32 ரன்கள், ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தோனியுடன் இணைந்த ஜடேஜா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜடேஜா ஆட்டமிழந்தார். 49-வது ஓவரை பெர்குசன் வீச, முதல் பந்தை தோனி சிக்சருக்கு அடிக்க, துரதிருஷ்டவசமாக 3-வது பந்தில் குப்தில்லின் துல்லிய த்ரோவில் ரன்அவுட் ஆனார் தோனி அரைசத்துடன் வெளியேறினார்.

இந்நிலையில் தோனி ரன் அவுட் ஆனபோது, வட்டத்தின் வெளியே 6 ஃபீல்டர்கள் இறந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. பவர் பிளேயின் போது ஐந்து ஃபீல்டர்கள் மட்டும் வட்டத்திற்கு வெளியே இருக்க வேண்டும் என்பது விதிமுறை இருக்கும் நிலையில், கள நடுவர் இதனைக் கவனிக்க தவறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

6 ஃபீல்டர்கள் வட்டத்துக்கு வெளியே நிற்கும் போதுதான் தோனி இரண்டாவது ரன் எடுக்க ஓடி ரன் அவுட் செய்யப்படுவார். நடுவர் இதனை முன்னரே கவனித்து நோ பால் கொடுத்திருக்க வேண்டும். அடுத்த பால் ஃப்ரீ ஹிட் என்பதால் தோனி இரண்டாவது நான் எடுக்க ஓடியிருக்க மாட்டார் என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.