தோனிக்கு பிரபலம் விடுத்த வேண்டுகோள்!!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி போட்டியில் இந்தியா 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. தோனி கடைசி வரை நின்று இந்திய அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் 50 ரன்கள் எடுத்த போது துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

இந்தியா உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியதால் தோனி ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில். இதையடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் பலர் தோனி தற்போதைக்கு ஓய்வு அறிவிக்க வேண்டாமென சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.புகழ் பெற்ற பிரபல பாடகர் லதா மங்கேஷ்கர், தோனிக்கு உணர்ச்சிப்பூர்வமான மெசேஜ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லதா மங்கேஷ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘வணக்கம் தோனி நீங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறீர்கள் என்ற செய்தியை நான் கேட்டேன். தயவு செய்து அதுபோன்ற எண்ணம் வேண்டாம் நாட்டிற்கு நீங்கள் தேவை. ஓய்வு முடிவு பற்றி சிந்திக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.