16 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து சீரழித்த வழக்கில் திடீர் திருப்பம்.!

இவ்வுலகத்தில் பல விதமான பிரச்சனைகள் நடந்து வருகிறது. அவ்வாறு நடைபெறும் பிரச்சனைகளில் பெரும் பிரச்சனையாக பெண்களுக்கு நடக்கும் கொடூரங்கள் இருந்து வருகிறது. நமது நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் மாற்றப்படும் பட்சத்திலேயே இதனை தவிர்க்க இயலும்.

சென்னையில் உள்ள புளியந்தோப்பை சார்ந்த 15 வயதுடைய சிறுமியை அவரின் தாயார் அருகில் இருக்கும் உறவுக்கார வயதான பாட்டியிடம் வேலைக்கு செல்லும் சமயத்தில் ஒப்படைத்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில்., கடந்த மூன்றாம் தேதியன்று சிறுமியை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு சென்ற நிலையில்., சிறுமிக்கும் – பாட்டிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த சமயத்தில்., சிறுமி சாலையில் செல்லும் நேரத்தில் தனக்கு தெரிந்த ஜெபினா என்ற பெண்ணை பார்த்து உள்ளார். அந்த சமயத்தில்., வீட்டில் இருந்து சிறுமி சண்டையிட்டு வந்ததை அறிந்த ஜெபினா சிறுமியை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று பணி வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து தனது தோழியான புரசைவாக்கத்தில் வசித்து வரும் நிஷா என்ற பெண்ணிடம் அழைத்து சென்றுள்ளார்.

சிறுமியை ஜெபினா மற்றும் அவரது மற்றொரு தோழியான முபீனா பேகம் நிஷாவிடம் அழைத்து சென்ற நிலையில்., சிறுமிக்கு மதுவை குளிர்பானம் என்று கூறி வழங்கி சிறுமியிடம் கொடுத்துள்ளனர். இதனை அறியாத சிறுமி குளிர்பானத்தை குடித்து நிலையறியாத போதை மயக்கத்தில் இருந்த நிலையில்., சிறுமியை ஐவருக்கு விருந்தாக்கியுள்ளனர்.

இதுமட்டுமல்லாது நிஷா விபச்சார தொழில் செய்து வரும் பெண்மணி என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. இந்த நிலையில்., காம கொடூரன்கள் ஐவர் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்த நிலையில்., சிறுமியை காணவில்லை என்று கூறி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சமயத்தில்., சிறுமி கடந்த ஏழாம் தேதியன்று உடலில் பலத்த காயத்துடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இவரை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் கதறியழுது நடந்ததை கேட்டறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து ஜெபினா., முபீனா மற்றும் நிஷா ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும்., சிறுமியை பலாத்காரம் செய்த ஐவரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த விசாரணையில்., மேற்கூறிய மூன்று பெண்களும் பாலியல் தொழில் தரகர்கள் என்பதும்., வீட்டை விட்டு வெளியே வரும் பெண்களை தேர்ந்தெடுத்து திட்டத்துடன் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதுமட்டுமல்லாது இவர்கள் மூவரும் கடந்த ஏழு வருடங்களாக இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய கொடூரன்களில் ஒருவன் வடமாநிலத்தவன் என்பதும்., அவனது பெயர் ராகுல் என்பதும் தெரியவந்தது. நிஷாவுக்கு அதிகளவு தொடர்புடைய ராகுல் இந்த செயலை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.