மனைவியிடம் ஆபாசமாக பேசிய வாலிபனை அடித்து நொறுக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்த கணவன்.!!

இவ்வுலகத்தில் பல விதமான பிரச்சனைகள் நடந்து வருகிறது. அவ்வாறு நடைபெறும் பிரச்சனைகளில் பெரும் பிரச்சனையாக பெண்களுக்கு நடக்கும் கொடூரங்கள் இருந்து வருகிறது. நமது நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் மாற்றப்படும் பட்சத்திலேயே இதனை தவிர்க்க இயலும்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனுர் அருகேயுள்ள பகுதியில் நபர் வியாபாரியாக பணி செய்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் பெண்ணின் அலைபேசி எண்ணை அறிந்த காம கொடூரன் பெண்ணின் அலைபேசி எண்ணிற்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளான்.

இதுமட்டுமல்லாது அவ்வப்போது ஆபாசமாகவும் குறுஞ்செய்திகள் அனுப்பி வந்துள்ளான். இதனை வெளியே கூறினால் பிறர் தவறாக எண்ணிவிடுவார்கள் என்று எண்ணிய பெண் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்ததை தனக்கு சாதகமாக உபயோகம் செய்து கொண்டான்.

தொடர்ந்து அலைபேசியில் ஆபாச புகைப்படங்கள்., ஆபாச விடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பியதை அடுத்து., ஆத்திரமடைந்த பெண் பொறுமையை இழந்து தனது கணவரிடம் இது குறித்த விபரத்தை கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் பெண்ணின் உறவினர்கள் சேர்த்து வியாபாரியை நையப்படைத்தனர். இதனால் படுகாயடைந்த வியாபாரியை அவர்களே கொண்டு சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தகவலானது காவல் துறையினருக்கு தெரியவரவே., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.