பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆப்கான் வீரர்.. !

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் அப்தாப் ஆலம், ஹொட்டலில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு வருடம் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளரான அப்தாப் ஆலம் விளையாடினார்.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சவுதாம்டனில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். அப்போது பெண் ஒருவரிடம் அப்தாப் ஆலம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அவரை ஆப்கான் அணியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை எடுத்தது. அதன்படி அதிரடி நடவடிக்கை எடுத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, ஆலம் மீதான புகார் குறித்து விசாரணை செய்தது.

அதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து, வீரர்களின் நடத்தை விதிகளை மீறி அவர் செயல்பட்டதாக கூறி, ஒரு வருடத்திற்கு அணியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையால் அவர் உள்ளூர் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என ஆப்கான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.