நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி 92 ரக ஒக்டேன் பெற்றோல் இரண்டு ரூபாவினாலும் (136 ரூபா), 95 ரக ஒக்டேன் பெற்றோல் ஐந்து ரூபாவினாலும் (159 ரூபா) குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுப்பர் டீசல் ஐந்து ரூபாவினால்  (131 ரூபா), குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.