தோனி நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்.. கோரிக்கை வைத்த லதா மங்கேஷ்கர்.!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெற்று விடுவார் என செய்தி வெளியாகி பரவி வருகிறது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றைய அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் தோனி ஓய்வு குறித்து செய்தியை அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தோனி ஓய்வு பெறக்கூடாது என்று இன்னும் நிறைய போட்டிகளை விளையாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் தோனிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில் நீங்கள் ஓய்வு பெற விரும்புவதாக நான் கேள்விப்பட்டேன். தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள். நீங்கள் இந்திய அணிக்கு தேவை. ஒய்வு பெறுவதை பற்றி யோசிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதை அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.