அமைதியான சாண்டியை கோபமாக்கிய மீரா!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அபிராமி கேப்டனாகவும் சேரன் க்ளீனிங் கேப்டனாகவும் இருந்து வருகின்றனர்.

இந்த க்ளினிங் ட்மீல் இருக்கும் மீரா சேரனிடம் எனக்கு வேலையை மாற்றிவிடுங்கள் என கூற 3 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவோம் என சேரன் கூறினார்.

அதாவது சாண்டி செய்துவந்த வேலையை மீரா கேட்டார். மீரா சேரனிடம் கேட்ட விஷயம் சாண்டிக்கு எப்படியோ தெரியவர படுக்கையில் படுத்திருந்த மீரா மீது தனது கோபத்தை உக்கிரமாக வெளிப்படுத்துகிறார், சாண்டி.

இதற்கு ரேஷ்மா உள்பட மற்ற போட்டியாளர்கள் சாண்டிக்கு துணையானார்கள். இதனால் மீரா, பிரச்சனையில் மாட்டிவிட பார்க்காதீர்கள் சாண்டி… என ஒரு சில வசனங்களை கூறிக்கொண்டே படுத்து கொண்டார்.

பின்பு இதுபற்றி டீமாக சேர்ந்து பேசும்பொழுது, சேரன் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து மீராவிடம் கத்திவிடுகிறார்.