அரசியலுக்கான பயிற்சி மையம் இல்லை சினிமா.! -ஓவியா.!!

களவாணி 2 படம் ஏகபோக வெற்றியை பெற்றுள்ளது. இதனால் உற்சாகமாக நடிகை ஓவியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “சினிமா ஒன்றும் அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இதுபோன்ற நிலைமை இருக்கிறது. கொஞ்சம் பிரபலமானால் உடனே அரசியலுக்கு வந்து விடுவது. அப்படி எனக்கு எந்த திட்டமும் இல்லை. சுயலாபத்துக்காக ஓவிய ஆர்மியை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

எதிர்காலத்தில் அரசியல் ஆசை ஏற்பட்டால் வருவேன். அப்படி வந்தாலும் தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன். எனக்கு தமிழர்கள் கொடுத்த வாழ்க்கை இது. நான் நல்லது செய்தால் அது தமிழ்நாட்டுக்கு மட்டும் தான். தமிழ் ரசிகர்கள் தான் எனக்கு அதிகம்.

ஒரே மாதிரியான படங்களில் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்ட நான் நினைக்கிறேன். இதனால்தான் 90ml காஞ்சனா களவாணி 2 போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். மலையாள படம் ஒன்றும் தயாராகிவிட்டது. பிக் பாஸில் நான் எந்த ஐடியாவும் இல்லாமல் தான் சென்றேன். வெளியில் என்ன நடக்கிறது என்ன நினைக்கிறார்கள் என்பது கூட எனக்கு தெரியாது. எனக்கு என்ன தோன்றியதோ அதைத்தான் நான் செய்தேன். சுதந்திரமாக இருந்தேன். அதனால்தான் மக்களுக்கு என்னைப் பிடித்துப் போனது.

என்னை காப்பி அடிக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு பதில் அவர்கள் இயல்பாக இருந்தாலே போதும். எனக்கு எதிரிகளும் நண்பரக்ளும் கிடையாது. எதிரி என யார் வந்தாலும், உடனே அவரை நண்பர் ஆக்கிக்கொள்வது எனது பண்பு.” என அவர் தெரிவித்துள்ளார்.

னிமா ஒன்றும் அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இதுபோன்ற நிலைமை இருக்கிறது. கொஞ்சம் பிரபலமானால் உடனே அரசியலுக்கு வந்து விடுவது. என ஓவியா கூறி இருப்பது ஒருவேளை சமீபத்தில் பொறுப்பேற்ற உதயநிதியை கூறுகிறாரே என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.