மகன் தாக்கியதில் ஆபத்தான நிலையில் தாயார்!

மகன் தாக்கியதில் ஆபத்தான நிலையில் தாயொருவர் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி கற்குளியில் இடம்பெற்றுள்ளது.

மது போதையில் வந்த மகனைக் கண்டித்த தாயை மகன் தள்ளி வீழ்த்தியதில் கதிரையுடன் மோதி ஆபத்தான நிலையில் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதையில் வந்த மகன் தாயாரிடம் உணவு கேட்டு முரண்பட்ட நிலையில் தாயாரைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.