மருத்துவகுறிப்புக்கள்!

நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம்.

  • கசகசாவை துளாக்கி பசும் பால் கலந்து இரவு வேலையில் சாப்பிட்ட பின் குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.
  • கரிசலாங்கண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேலையில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
  • காலையிலும், இரவிலும் காய்ச்சிய ஒரு டம்பளர் பசும்பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தசோகை குணமாகும்.
  • தும்பைப் பூவை தினமும் வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தொண்டைபுண், தொண்டைவலி குணமாகும்.
  • முருங்கை இலைச்சாறு இரண்டு டீஸ்பூன் தினமும் காலை,மாலை சாப்பிட உடல் எடை குறையும்.
  • அவரை இலையை உலர்த்தி இடித்து தூளாக்கி தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.
  • வெள்ளைத்தாமரை இதழ்களை கசாயம் வைத்து பாலுடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கை நடுக்கம் குணமாகும்.
  • தினமும் இரண்டு கேரட் சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்போடு முகம் பொலிவு பெறும். தோல் சொரசொரப்பு மாறும்.
  • ஆளிவிதையை தினமும் அரைத்து சாப்பிட்டு வந்தால் விரைவில் உணவு செரிக்காமை குணமாகும்.
  • அகத்திக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெற்று சுறுசுறுப்புடன் இருக்கும்.
  • நெல்லிக்காயை சாறெடுத்து நல்லெண்ணையை சம அளவு கலந்து தலையில் தேய்த்து குளிக்க முடி உதிர்வு குறையும்.
  • புதினா கீரை, இஞ்சி, எலுமிச்சை சாறு தினசரி உணவில் சேர்த்து வந்தால் இளநரை மாறி முடி கருப்பாகும்