ஆவி உங்களை நெருங்கும் நேரத்தில் என்ன நடக்கும்?

பேய் உள்ளதா இல்லையா என்பது இன்றளவும் வாக்குவாதமாக உள்ளது. ஆனால் தங்களைச் சுற்றி வழக்கத்திற்கு மாறான சம்வங்கள் நடப்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள்.

இத்தகைய சம்பவங்களுக்கு தர்க்க ரீதியான விளக்கங்கள் ஏதும் இருக்காது. பேய் பிசாசு இருக்கிறது என்பதற்கான கதைகளும், கட்டுக்கதைகளும் இருக்கவே செய்கிறது.

ஒரு வீட்டை தங்களின் இருப்பிடமாக அவைகள் மாற்றினால் அது பேய் உலாத்தும் வீடாக மாறி விடுகிறது.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல விந்தையான நிகழ்வுகளுக்கு விளக்கம் அளிக்கவும் இந்த பேய் பிசாசு விஷயங்கள் கைகொடுக்கிறது.

பேய்கள் மற்றும் ஆவிகளை சுற்றி நிலவும் வேடிக்கையான கதைகள் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.