வெளிநாட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இலங்கை தமிழ்ப்பெண்…!

இலங்கையை சேர்ந்த ஒரு பெண் அவுஸ்திரேலியாவில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பொலிசார் அவரது கணவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார்கள்.

சுமார் பத்து ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வாழ்ந்து வரும் அந்த தம்பதி, சமீபத்தில்தான் தென் கிழக்கு ஆசிய நாடொன்றிற்கு சென்று வந்துள்ளதாக தெரிகிறது.

திங்கட்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின்பேரில், Springfield Lakes பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டுக்கு பொலிசார் சென்றுள்ளனர்.

அங்கு ஒரு 54 வயது பெண் கழுத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் கிடப்பதை பொலிசார் கண்டுள்ளனர்.

அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் தடயவியல் நிபுணர்கள் தடயங்கள் ஏதேனும் கிடைக்குமா என ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த தம்பதி நீண்ட காலமாக அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தாலும் இப்போது அவர்கள் இருக்கும் தெருவுக்கு புதியவர்கள் என்பதால் அவர்களைக் குறித்து யாருக்கும் தெரியவில்லை.

பொலிசாருக்கும் அவர்களைக் குறித்து தெரியாத நிலையில், உயிரிழந்த பெண்ணையோ அல்லது அவரது கணவரையோ தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தங்களை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.