வாட்ஸப்பின் அடுத்த அப்டேட்.!

இன்றுள்ள நாம் இணைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறோம். உலகம் உள்ளகையில் என்ற பழமொழிக்கு ஏற்ப நமது கைகளில் இருக்கும் அலைபேசியின் செயலிகள் வழியாக நாம் உலகின் பல்வேறு இடத்தில் நடக்கும் விஷயங்களை அறிந்து கொண்டு வருகிறோம்.

அந்த வகையில்., இந்த உலகை சுற்றி பல விசித்திரமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அலைபேசியில் இருக்கும் செயலிகள் தயாரிப்பாளர்களும் வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்ற பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றுள்ள பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் செயலியாக நம்மிடம் இருப்பது வாட்சப் செயலியும் ஆகும். இன்றுள்ள பிற செயலிகளில் நைட் மோட் என்பதும் அமைப்பானது செயல்பாட்டில் உள்ளது. இந்த அமைப்பானது வாட்சப் மற்றும் முகநூல் செயலில் இல்லை.

வாட்சப் மற்றும் முகநூல் வாடிக்கையாளர்கள் நைட் மோட் கேட்டதன் விளைவாக தற்போது வாட்சப் நிறுவனம் நைட் மோட் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான முதற்கட்ட செயல்பாடுகளை துவங்கியுள்ள வாட்சப் நிறுவனம்., சோதனை வெற்றியடைந்ததும் அதிகாரபூர்வமாக இந்த தகவலை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளது.