இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றம்.!

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் 34 வது லீக் ஆட்டத்தில் நேற்று மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்தியா விளையாடியது. அதில் முதலில் டாஸ் வெற்றி பெற்று இந்தியா அணி பேட்டிங் செய்தது.

இந்திய அணி தொடக்கத்தில் ரோஹித் சர்மா அவுட் ஆனது அதிர்ச்சிக்குள்ளானது. பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி நிலைத்து ஆடி 72 ரன்களை குவித்தார். அதன் பிறகு டோனி மற்றும் ஹர்டிக் பாண்டியா நிலைத்து ஆடி அணியின் ரன்களை உயர்த்தினார்கள். 50 ஓவர் முடிவுற்ற நிலையில் 268/7 (50.0)

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்தது கெயில் 6 அவுட் ஆனார். அதன் பிறகு யாரும் நிலைத்து ஆடவில்லை. இந்தியா பந்துவீச்சாளர்கள் பந்தை சமாளிக்க முடியாமல் திணறியது அனைவரும் அடுத்தடுத்து உடனே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாபமாக தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் விஜய்சங்கர் நான்காவது வீரராக களமிறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த விஜய்சங்கர்,14 ரன்களில் அவுட்டானது அதிர்ச்சி அளித்தது. இதைத்தொடந்து விஜய்சங்கரின் மோசமான ஆட்டத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விஜயசங்கர் அணியில் இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் பெரிய அளவில் விஜயசங்கர் செயல்படவில்லை. இவருக்கு ரிஷ்ப பந்துக்கே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.