2.0 சீன ரிலீசுக்கு வந்த சிக்கல்…..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 படம் சென்ற வருடம் வெளிவந்தது. தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்றாலும் உலகம் முழுவதும் வந்த வசூல் 600 கோடியை தாண்டியது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம் 12ம் தேதி சீனாவில் படம் 56000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த படத்தை வெளியிடவிருந்த HY Media நிறுவனம் தற்போது ரிலீஸ் செய்ய தயங்குவதாக கூறப்படுகிறது.

காரணம் அவர்கள் இதற்குமுன்பு அக்ஷய் குமாரின் பேட்மேன் படத்தை சீனாவில் வெளியிட்டுள்ளனர், அது படுதோல்வியடைந்ததால் அதிகம் நஷ்டம் அடைந்துள்ளனர். அதுபோல இந்தியாவில் சரியாக ஓடாத 2.0 படத்தை சீனாவில் வெளியிட்டால் தங்கள் பணத்தை இழக்க நேரிடும் என கருதி 2.0 ரிலீஸை நிறுத்திவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அதே நாளில் லையன் கிங் என்ற ஹாலிவுட் படம் ரிலீஸ் ஆகிறது. அதனால் 2.0 படம் அதிகம் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது.

இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்ப்பார்கலாம்.