இலங்கை போட்டியாளர் பிக்பாஸ் லொஸ்லியா ஆர்மி!

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருவார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மிகப்பெரிய ரசிகரும் ஆவார். கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது போட்டியாளர்களை குறித்து அடிக்கடி டுவிட் செய்து வந்தார்.

தற்போது இந்த சீசனையும் பின் தொடர்ந்து வருகிறார் சதீஷ்.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி இரண்டு நாட்களே ஆகியுள்ளது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல நடிகர் நடிகைகள் போட்டியாளராக பங்குபெற்றாலும். ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத சில போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் இலங்கையை சேர்ந்த லொஸ்லியாவும் ஒருவர்.

இலங்கையை சேர்ந்த லொஸ்லியா அங்கிருக்கும் இலங்கையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாகவும், செய்திவாசிப்பாளராக அனைவராலும் நன்கு அறியப்பட்டவர்.

இந்நிலையில் லோஸ்லியா யார் ? என்ன ? என்ற விவரம் இணையத்தில் வெளியாவதற்கு முன்பாகவே இவருக்கென்று பல்வேறு ஆர்மியை ரசிகர்கள் உருவாக்கிவிட்டனர்.

Losliya Army, Losliya Fc உருவாக்கிவிட்டனர்.

பல்வேறு பக்கங்கள் இணையத்தில் உலா வருகிறது. இதனை குறிப்பிட்டுள்ள நகைச்சுவை நடிகர் சதீஷ், அடப்பாவிங்களா அதுக்குள்ளயே ஆர்மியா என்று டுவிட் செய்துள்ளார்.

அதில் லொஸ்லியாவியாவை பார்க்கும் சதீஷின் கண்கள் பெரிதாக இருக்கின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஆர்மிக்களை துவங்குவது வழக்கமான ஒன்று தான்.

ஆனால், லொஸ்லியாவிற்கு 24 மணி நேரத்திலேயே பல ஆர்மியை திறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.