விபத்தில் உயிரிழந்த பெற்றோர் மற்றும் தந்தையின் உடலை முத்தமிட்டு கதறிய சிறுவன்.!!

இந்த உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் விபத்துகள் என்பது தொடர் கதையாகியுள்ளது. நிமிடத்திற்கு உலகம் முழுவதும் பல விபத்துகள் நடைபெறுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளியாகும் வண்ணம் உள்ளது.

மேலை நாடுகளில் கூட பல விதமான கடுமையான சட்டதிட்டங்கள் அமலில் இருந்தாலும் எதிர்பாராத நேரத்தில் சில விபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

அவ்வாறு நடைபெறும் விபத்துகளால் பல அப்பாவி மக்களின் உயிர்கள் பரிதாபமாக பலியாகியும்., பலர் தங்களின் உடல் உறுப்புகளை இழந்தும் வருகின்றனர். இந்த நிலையில்., திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்து குறித்த காணொளி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோட்டார் வாகனத்தில் நான்கு பேர் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்த நிலையில்., எதிரில் வந்த வாகனம் பலமாக மோதியதில் அந்த மோட்டார் வாகனத்தில் இருந்த தாய்., தந்தை மற்றும் சகோதரி என்று மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

இதில் பயணித்த சிறுவன் மட்டும் அதிஷ்டவசமாக தப்பிக்கவே., இறந்த தனது சகோதரி மற்றும் பெற்றோர்களின் உடலை கட்டியணைத்து முத்தமிட்ட காட்சிகளானது அங்கிருந்த மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.