தள்ளாடும் வயதில் இப்படியா நடக்கணும்.?

தூத்துக்குடி அருகே ஸ்பிக் நகரை சேர்ந்த சங்கரன் வயது (80) என்பவர் கூலி வேலை செய்து தன்னை கவனித்து வந்துள்ளார். இதில் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. பல மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை பார்த்தும் பலன் அளிக்கவில்லை.

இதன் காரணமாக சங்கரன் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். விரக்தியின் உச்ச கட்டத்திற்குச் சென்ற சங்கரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.