முல்லைத்தீவில் இளம் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய குடும்பஸ்தர்…

மனைவியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் தனது தலையில் பெற்றோல் ஊற்றி பகிடிக்காக தற்கொலைக்கு முயன்ற இளம் கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு தீர்த்தக்கரையினை சேர்ந்த 34 வயதுடைய இராசதுரை யோகராசா என்பவரே இவ்வாறு நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது,

முல்லைத்தீவு தீர்த்தக்கரைப் பகுதியில் குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக மனைவியுடன் பேசிவிட்டு தனது தலையில் பெற்றோலை ஊற்றி பகிடிக்காக தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் தீப்பற்றியதனால் விளையாட்டு விபரீதமாகி இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இதன் போது எரிகாயங்களுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இவரது உயிரிழப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.