போதையில் தள்ளாடிய கருணா – பிள்ளையான்!

நேற்று முன் தினம் அரசின் உறுதி மொழியை கொண்டு வந்த அமைச்சர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பிக்களோடு கடும் தர்க்கத்தில் ஈடுபட்ட தரப்புகள் தொடர்பில் மேலும் பல தகல்கள் வெளியாகியுள்ளன.

இதில் குழப்பம் விளைவித்தவர்கள்,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் புஸ்பராஜா மற்றும் நவரட்ணராஜா போன்றோர் நற்பட்டிமுனை – கல்முனை மாநகரை அண்டிய பகுதியில் அனைவருக்கும் இலவச மது வழங்கியுள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கு, அமைச்சர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்த பகுதிக்குள் நுழைந்தவுடன் கூச்சலிட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் படி புஸ்பராஜா மற்றும் நவரட்ணராஜா ஆகியோர் கட்டளையிட்டுள்ளனர்.

இவர்கள் தாக்குதல் நடத்த தேவையான போத்தல்கள் மற்றும் கற்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் வைக்கப்பட்டு காணப்பட்டிருந்துள்ளன.

எனினும் எதிர்பாராமல் அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்ததால் அமைச்சர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்படவில்லை.

எனினும் அமைச்சர்கள் மற்றும் கூட்டமைப்பின் எம்பிக்கள் வரும் நேரத்தை குழப்பகாரர்களுக்கு வழங்கியது அப்பகுதி அரசியல் கட்சியின் உறுப்பினரான ஜனகன்.

ஒட்டு மொத்தத்தில் நேற்றைய தினத்தில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது என்பதை விட கூட்டமைப்பை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே அனைவருக்கும் அதிகமாக இருந்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கருணாவுடன் ஒருவர் கள்ளத் தொடர்பில்

போராட்ட களத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு பகுதியினர் மதுபோதையில் இருந்தார்கள்.

போதாதற்கு, எதிர்ப்பை பின்னணியிலிருந்து தூண்டிய ஒருவரின் தொலைபேசி ஒலிப்பதிவும் சிக்கியது.

அரசின் வாக்குறுதியுடன் பிரமுகர்கள் அங்கு வந்ததில் இருந்து, நிமிடத்திற்கு நிமிடம் “அம்மான் சொல்லுங்கோ“ என அவர் யாரிடமோ ஆலோசனை பெற்றுக்கொண்டிருந்தார். பிரமுகர்களிற்கான எதிர்ப்பை வடிவமைத்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

அவரது நடவடிக்கையில் கணிசமான மக்கள் அதிருப்தியடைந்திருந்தனர். எனினும், அதற்காக அவர்கள் எல்லைமீறி நடந்ததில்லை.