ஏன் இந்துக்கள் கோயிலில் மொட்டை அடிப்பது?

இந்து மதத்தில் எண்ணற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், பண்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதில் தலை முடியை கடவுளுக்கு காணிக்கையாக வழங்கும் சடங்கும் ஒன்றாகும்.

இந்து சமயத்தின் படி பிறப்பு மற்றும் மறுபிறவி மீது அதிக நம்பிக்கை கொண்ட இந்து மதத்தினர் மொட்டை அடிப்பதன் மூலம் மறுபிறவியை தடுக்க முடியும் எனவும் நம்புகின்றனர்.

அதன் காரணமாக கடவுளுக்கு தன் தலைமுடியை காணிக்கையாக வழங்கி தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு மொட்டையடிக்கப்படுகிறது.

அதோடு தலைமுடி பெருமை என்பதை தாண்டி ஆணவமாக பார்க்கப்படுகின்றது. அதனால் தலைமுடியை கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்து கடவுளை சரணாகதி அடையும் வழியாக இதை பார்க்கப்படுகிறது.

மேலும் ஆன்மிகத்தை தாண்டி, அறிவியல் கருத்துப்படி தலையில் மொட்டை அடிக்கப்படுவதால் மீண்டும் முடிகள் ஆரோக்கியமாக வளரும் வாய்ப்பு உள்ளது. தலையில் இருக்கும் அழுக்கு, கிருமிகள் அகலும்.

இதனால் தலை முடி உதிர்வு பிரச்னை சரியாகும். குழந்தைக்கு முதல் மொட்டை ஒரு வருடத்திற்குள் போடுவதால், தலை முடி பின்னிக்கொள்வது தடுக்கப்படுகிறது என கூறப்படுகின்றது.

அதனால் இந்து மதத்தில் மொட்டை அடிப்பது என்பது மிகவும் முக்கியமான சடங்காக கருதப்படுகின்றது.