திருமணத்திற்காக பதிவியேற்பு நிகழ்வை தவறவிட்ட பெண் எம்பி!

மேற்கு வங்க நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினருமான நுஸ்ரத் ஜஹான், துருக்கியில் திருமணம் செய்துகொண்டதால் பதியேற்பை தவற விட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பாசிராத் தொகுதியில் களமிறக்கப்பட்டவர் பெங்காலி நடிகை நுஸ்ரத் ஜஹான்.

அங்கு அமோக வெற்றி பெற்ற நுஸ்ரத் ஜஹானிற்கு பொதுமக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல நுஸ்ரத் ஜஹானின் தோழியும், நடிகையுமான மிமி சக்ரபர்த்தி, ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இருவரும் சேர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் எடுத்து வெளியிட்ட புகைப்படமானது இணையதளவாசிகள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்தது.

இந்த நிலையில் நுஸ்ரத் ஜஹானுக்கும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும் துருக்கியில் உள்ள போட்ரம் நகரில் நேற்று திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஜாதவ்பூர் எம்.பியான மிமி சக்ரபர்த்தியும் கலந்துகொண்டார். இதனால் இருவரும் மக்களவை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தவறிவிட்டனர்.