திடீரென தடம் புரண்ட புகையிரதம்..!! பயணிகள் அசௌகரியம்..!

கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச்சென்ற விசேட புகையிரதமொன்று தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த புகையிரதம் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கும், ரெசல்ல புகையிரத நிலையத்திற்கும் இடையிலான 106. மைல் கல் பகுதியிலே பிற்பகல் 03.00 மணியளவில் தடம்புரண்டுள்ளது.இந்த விசேட புகையிரதத்தின் இறுதி பார்வையாளர் பெட்டி தண்டவாளத்தை விட்டு விலகியதினாலேயே புகையிரதம் தடம்புரண்டுள்ளதுடன்,புகையிரத கடவையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக மலையகத்தின் புகையிரத சேவை ஹட்டனிலிருந்து பதுளை வரையிலும், ரொசல்லையிலிருந்து கொழும்பு வரையிலுமாக சேவை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடம்புரண்ட புகையிரத பெட்டியை தவிர ஏனைய பெட்டிகளுடன் புகையிரதம் பதுளை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், பாதையின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின் சேவை வழமைக்கு திரும்பும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.