திடீரென இறந்து கரையொதுங்கும் மீன்கள்..!!

கடந்த மாதம் ஜப்பான் கடலோர பகுதிகளில் ஓர் மீன்கள் கரை ஒதுங்கி இறந்து கிடந்த சம்பவம், ஜப்பான் மக்கள் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியிருந்தது.

ஜப்பான் அல்லது பூமி மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்கப் போகிறதென்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டடு வந்தது.ஓர் மீன்கள் கரை ஒதுங்கியதைத் தொடர்ந்து கடலோர பகுதி மக்கள் பதட்டம் மற்றும் பீதியுடன் கவலை கொண்டிருந்தனர்.கடலோர பகுதி மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி, அரசாங்கம் விரைவில் உத்தரவிடக் கூடும் என்று தகவல்கள் கடந்த மாதம் வெளியாகியது. பீதியிலிருந்த ஜப்பான் மக்கள் எதிர்பார்த்தது போலவே, தற்பொழுது ஜப்பானைச் சுனாமி தாக்கியுள்ளது.

அப்படியானால், ஜப்பான் புராணங்களில் கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் உண்மை தானா என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.ஜப்பானியப் புராணங்களின் படி இறந்த ஓர் மீன்களைக் கடலுக்கு வெளியில் காண்பது கெட்ட சகுனமாக நம்பப்படுகிறது. இந்த மீன்கள் ஆழ்கடலில் வாழும் ஒரு மீன் இனம் ஆகும்.இவ்வகை மீன்கள் சுமார் 3000 அடி ஆழத்தில் கடலின் ஆழ்கடலில் இருட்டில் மட்டுமே வாழும் உயிர் வகையாகும்.இந்த ஆழ்கடல் மீன்களைக் கடலுக்கு அடியில் காண்பதே அரிது என்று கூறப்படும் நிலையில், கடந்த சில தினங்களாய் ஜப்பானியக் கடல் கரைகளில், இந்த மீன்கள் அதிக அளவில் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.

‘ஓர்’ எனப்படும் இந்த மீன்கள் கரையில் காணப்பட்டால், சுனாமி, நிலநடுக்கம் ,அல்லது ஏதேனும் பேரழி நிகழும் என்று ஜப்பானியப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஜப்பானியக் கலாச்சாரத்தின்படி, ஜப்பானிய மக்கள் இதைப் பெரிதும் நம்புகின்றனர்.கடந்த மாதம் ஓர் மீன்கள் அதிக அளவில் கரையில் காணப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது ஜப்பானை சுனாமி தாக்கியுள்ளது.கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பூகம்பமாக, டோக்கியோவில் நிகழ்ந்த பூகம்பம் பதிவு செய்யப்பட்டது. இந்த பூகம்பத்திற்கு சுமார் 19,000ற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர் என்பதும் ஓர் மீன்கள் கரை ஒதுங்கிய சில தினங்களுக்குப் பின்பு தான் இந்தப் பேரழிவு சுனாமியைத் தொடர்ந்து வந்தது என்பதும் தான் மிகப் பெரிய உண்மை.பூகம்பம் அல்லது பேரழிவுகள் நிகழும் முன்பு விலங்குகள் வித்தியாசமாக நடந்துகொள்ளும் நிகழ்வுகள் பலவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.373 பி.சி. காலகட்டத்தில், குளிர்காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றி ரோம எழுத்தாளர் கிளாடியஸ் ஏலியானஸ் தனது பத்திரிகையில் கூறியிருப்பது ‘பண்டைய கிரேக் ஹெலிகே நகரத்தில் நிகழ்ந்த பூகம்பத்திற்கு முன்பாக கொறித்துண்ணிகள் பாம்புகள் போன்ற உயிரினங்கள் பூகம்பம் நிகழ்வதற்கு முன்னர் நாள் இரவு அனைத்து விலங்குகளும் நகரத்தைவிட்டு வெளியேறியதென்று’ பதிவு செய்துள்ளார்.1975 ஆம் ஆண்டில், சீனாவின் தலைநகரான ஹைசெங் நகரிலிருந்து ஒரு மில்லியன் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.லைனோனிங் மாகாணத்திலிருந்த விலங்குகள் வித்தியாசமாக நடந்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில தினங்களில் 7.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் சீனாவில் ஏற்பட்டது.சரியான நேரத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படத்தினால் பெரிய அளவிலான உயிர்ச் சேதம் அந்த நேரத்தில் தடுக்கப்பட்டது.ஜப்பானியப் புராணத்தின்படி ஓர் மீன்கள் கரை ஒதுங்கிய சில தினங்களில், தற்பொழுது ஜப்பான் பகுதியில் சுனாமி தாக்கியுள்ளது. இறந்த ஓர் மீன்கள் பற்றிய சகுனம், தற்பொழுது உண்மை என்று உறுதியாகியுள்ளது. மிதமான சுனாமி மட்டும் நிலநடுக்கம் ஜப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்னும் சில தினங்களுக்கு மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.