பயங்கரவாதிகளின் தாக்குதலில் இராணுவ மேஜர் வீரமரணம்.!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் பயங்கரவாதிகள் அவ்வப்போது எல்லை கடந்து அத்துமீறி நுழைந்து., இந்தியாவில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல அப்பாவி மக்கள் மற்றும் இராணுவ வீரர்களின் உயிரும் பரிதாபமாக பலியாகி வரும் சம்பவம் தொடர் கதையாகியுள்ளது.

இந்த நிலையில்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் அரங்கேறிய தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பின்னர் இராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில்., எல்லை மீறி வந்து பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் இன்று இரண்டு பயங்கவாதிகள் கொல்லப்பட்ட நிலையில்., இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில்., இவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில்., இராணுவ மேஜர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் உயிரிழந்தார்.