தாயிடம் இருக்கும் சமயத்தில் பிறந்த குழந்தை அழுவதில்லை ஏன்?

பொதுவாக நமது குழந்தைகள் பிறந்தவுடனே அழத் துவங்கிவிடும். ஆனால்., இந்த சமயத்தில் அழும் குழந்தைகளின் கண்களில் இருந்து கண்ணீர் வராது. இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால்., குழந்தைகள் பிறக்கும் தருணத்தில் கண்களில் கண்ணீர் சுரப்பிகள் என்பது இருக்காது. இதன் காரணமாகவே குழந்தைகள் அழும் சமயத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதில்லை.

குழந்தைகள் பிறந்து மூன்று மாதங்கள் கழித்த பின்னரே கண்களில் கண்ணீர் சுரப்பியானது வளர துவங்கும். இதற்கு பின்னர் தான் குழந்தைகள் அழும் சமயத்தில் அவர்களின் கண்ணில் இருந்து தண்ணீரானது வர துவங்கும். குழந்தைகள் பிறந்த சமயத்தில் அவர்களின் தலை மற்றும் உடலில் இருக்கும் மென்மையான உரோமங்கள் அதிகளவு இருந்தாலும்., சில நாட்களில் அவை உதிர்ந்துவிடும்.

பொதுவாக பிறந்த குழந்தைகளை யாரேனும் தூக்கினால் அழுவதை தொடங்கும். பின்னர் தாயிடம் சென்றால் தனது அழுகையை அது அப்படியே நிறுத்திவிடும். இதற்கு காரணமாக குழந்தை கருவில் இருக்கும் சமயத்தில் தாயாரின் குரல் மற்றும் பரிசத்தை நன்றாக உணர்ந்து இருக்கும். இதன் காரணமாகவே தனது தாயாரிடம் சென்றால் குழந்தைகள் உடனடியாக அழுகையை நிறுத்திவிடும்.

புதியதாக பிறந்த குழந்தைக்கு சராசரியாக 20 அடி தூரம் வரை மட்டுமே பார்க்க இயலும். இதுமட்டுமல்லாது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தை மட்டுமே உணர இயலும். சிறிது வளர வளரவே நிறங்களை பிரித்து கொண்டு மாற்றத்தை அறியும். குழந்தைகள் ஒரு நபரின் முகத்தை நன்றாக காணுவதன் மூலமாகவே., ஒரு நபரின் முகத்தை கண்டவுடன் அவரின் முக பாவனைக்கேற்ப தனது அழகான சிரிப்பை முகத்தில் மறைக்க தெரியாமல் சிரிக்கிறது. புதியதாக பிறந்த குழந்தைக்கு மொத்தமாக 270 எலும்புகள் இருக்கும்., குழந்தை வளரத்துவங்கும் சமயத்தில் இந்த எலும்புகள் அனைத்தும் இணைந்து 206 ஆக மாறுகிறது.