உலக காற்று தினம் மற்றும் முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்.!

உலக காற்று தினம்:

உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும்.

இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. மேலும் காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் :

உலகில் உள்ள அனைத்து முதியவர்களுக்கும் மரியாதை கொடுக்கவும், மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் ஜூன் 15ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

சுமார் 4 முதல் 6 சதவீதம் முதியோர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். முதியவர்களை மரியாதையுடன் நடத்த ஐ.நா.சபை இத்தினத்தை அறிவித்துள்ளது.