உயிருக்கு உலை வைக்கும் பப்பாளி!

பப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான பழம். இதன் விலையும் மலிவாகவே இருப்பதால் இதை “ஏழைகளின் கனி” என்றும் கூறுவர்.

இதன் இனிமையான சுவையால் “பழங்களின் தேவதை ” என்றும் அழைக்கப்படும் . மனித உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டிலுமே பப்பாளியின் பங்கு மகத்தானது.

பலவகையான ஊட்டச்சத்துக்களை கொண்ட பழங்களில் பப்பாளி முதன்மையானது. 100gm பப்பாளியில் 43கலோரிகள் மட்டுமே உள்ளன.

மஞ்சள் நிற பழங்களில் காணப்படும் கரோட்டின் சத்து இப்பழத்தில் அதிகம் காணப்படுகிறது.இந்த சத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது.

18 வகையான சத்துக்கள் கொண்ட ஒரே பழம் பப்பாளியாகும். உடல் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதைவிட தினமும் சிறிது பப்பாளி பழத்தை சாப்பிடுவது சிறந்த நன்மையை தரும்.

இருப்பினும் இந்த பழத்தைக் குறிப்பிட்ட மக்கள் சாப்பிடக்கூடாது. அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிடும் போது உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் நோய்களையும் உண்டாக்கும்.

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் பச்சையாக இருக்கும் பப்பாளியை சாப்பிடக்கூடாது. இது கருச்சிதைவை உண்டாக்கும். பச்சை பப்பாளியில் லாடெக்ஸ் என்னும் கருப்பையை சுருக்கும் உட்பொருள் உள்ளது. ஆகவே கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

சுவாச பிரச்சினைகள்

பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள், சுவாச பிரச்சனைகள் இருப்போரது நிலையை தீவிரமாக்கும். ஆகுவே ஆஸ்துமா உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

சிறுநீரக கற்கள்

பப்பாளியில் ஏராளமான அளவில் வைட்டமின் சி உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலுவற்ற தன்மையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இருப்பினும் அளவுக்கு மிஞ்சினால், எதுவும் தீங்கை தான் உண்டாக்கும். அதில் பப்பாளி மட்டும் விதிவிலக்கல்ல. பப்பாளியை அதிகளவில் உட்கொண்டால், அதில் உள்ள வைட்டமின் சி சிறுநீரக கற்களை உருவாக்கும்.

இரைப்பை குடல் பிரச்சினைகள்

அளவுக்கு அதிகமாக பப்பாளியை உட்கொண்டால், அது இரைப்பைக் குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். அதே சமயம் அதில் உள்ள பாப்பைன் அதிகளவு வயிற்றினுள் செல்லும் போது, அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். ஆகவே இரைப்பை குடல் பிரச்சினை உள்ளவர்கள், இப்பழத்தை தவிர்ப்பதோடு, மற்றவர்கள் அளவாக சாப்பிடுவதே நல்லது.

குறைவான இரத்த சக்கரை

நன்கு நொதிக்கப்பட்ட பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். பப்பாளியை ஒருவர் இந்நிலையில் எடுத்தால், இரத்த சக்கரை அளவு குறையும். அதுவும் ஏற்கனவே குறைவான இரத்த சர்க்கரை உள்ளவர்கள் உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. ஆகவே கவனமாக இருங்கள்.