அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய ஈழத்து சிறுவனின் இறுதி ஓவியம்!

இந்தியாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த வவுனியா சிறுவர் ஒருவர் நேற்று முன்தினம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சி.விதுஷன் என்ற சிறுவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களாக இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த விதுசன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

இதேவேளை, அவர் இறுதியாக வரைந்த ஓவியங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர். குறித்த புகைப்படங்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.