ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி, ரிஷாட் க்கு எதிராக களமிறங்கிய பொதுமக்கள்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின், முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலியை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரையும் கைது செய்யுமாறு கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய பதுளை, வெலிமடை நகரில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊவா மாகாண சபை உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.