ஷிகர் தவானிற்கு பதில் இவரா.?

உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணிக்கு அதிர்ச்சியாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கடந்த ஆஸ்திரேலிய போட்டியின் போது, அடைந்த காயம் பெரிய காயமாக இருப்பதாகவும், அவர் அணியிலிருந்து விலகியதாகவும், தகவல்கள் வெளியாகின.

அவர் அணியிலிருந்து வெளியானதாக தகவல் வெளியானதும், அவருக்கு பதிலாக யாரை மாற்று வீரராக களம் இருக்கலாம் என்பது வரை விவாதங்கள் நடந்து முடிந்த நிலையில், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர், அம்பத்தி ராயுடு இவர்களில் ஒருவரை கிளம்பலாம களமிறக்கலாம் என ஒவ்வொருவரும் ஒரு கருத்தை தெரிவித்து வந்தனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் , “ஷிகர் தவான் தொடர்ந்து இங்கிலாந்தில் இருப்பார் எனவும், தொடர்ந்து அணியுடன் நீடிப்பார் எனவும், அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பார் எனவும் அதிகாரப்பூர்வமான ஒரு தகவலை வெளியிட்டளது.

இந்நிலையில், இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் “காயமடைந்த தொடக்க வீரர் ஷிகர் தவானை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், அவர் காயத்தில் இருந்து மீள 10 முதல் 12 நாட்கள் தேவைப்படும். தேவைப்பட்டால் தவானுக்கு பதிலாக, விஜய் சங்கர் விளையாடுவார் இருப்பினும் ரிஷப் பந்த் இங்கிலாந்தில் இருப்பார்” என அவர் தெரிவித்துள்ளார்.