வீட்டில் கண்ட காட்சியால் ஓட்டம்பிடித்த நபர்!

ப்ளோரிடாவில் இரவு ஷிப்ட் சென்று திரும்பிய ஒரு நபர் வீட்டு வாசலில் ஆறு அடி நீளம் கொண்ட ஒரு முதலை படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறார்.

Michael Prestridge 10 மணி நேர இரவு ஷிப்டை முடித்து விட்டு தூக்கக் கலக்கத்துடன் வீடு திரும்பியிருக்கிறார்.

அவரது வீட்டு வாசலில், ஆறு அடி நீள முதலை ஒன்று வழியை அடைத்துக் கொண்டு படுத்திருந்திருக்கிறது.

அதை படம் எடுத்து சமூக ஊடகத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார் அவர். அதை படித்த ஒருவர், நீங்கள் என்ன செய்தீர்கள் என்று Michaelஇடம் கேட்க, அவர், வேறென்ன ஒரே ஓட்டமாக அங்கிருந்து ஓடி விட்டேன்.

அப்புறம் என்னை நானே திட்டிக் கொண்டு, விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு பொலிசாரை அழைத்தேன்.

அவர்கள் முதலை பிடிப்பவரை அழைத்துக் கொண்டு வந்து, முதலையை பிடித்துக் கொண்டு சென்று விட்டார்கள் என்று பதிலளித்திருக்கிறார்.

அந்த முதலை மட்டும் வராமலிருந்திருந்தால் தூக்கக் கலக்கத்தில் தூங்கிக் கொண்டேதான் இருந்திருப்பேன் என்கிறார் Michael.