மோடியின் உழைப்பிற்கு கிடைத்த பரிசு.!

பிரதமர் மோடி பதவியேற்பதற்கு முன்னதாக, “புதிய அரசானது முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும்” என பேசினார்.

இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

முஸ்லிம் சமூக மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முஸ்லிம் சமுதாயத்திற்கு பல முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றது. அதில் கவனம் செலுத்தி சமூகம் மேம்பட நீங்கள் உதவி புரிய வேண்டும்.

அதோடு அந்த சமூகத்திடம் மத்திய அரசானது உரையாடல்களை அதிகப்படுத்த வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் குடிமகன்களின் வளர்ச்சியை பொறுத்தே, எனவே, அத்தகைய வளர்ச்சியை கொடுக்க முஸ்லிம் மக்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களது ஆதரவை மோடிக்கு வழங்குவதாக மறைமுகமாக அவர்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.