புகார் கூறிய பெண்ணை திருமணம் செய்துகொண்ட எம்.எல்.ஏ!

திரிபுரா மாநிலத்தில் தன் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த பெண்ணையே எம்.எல்.ஏ திருமணம் செய்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க – திரிபுரா மக்கள் முன்னணி கூட்டணி சார்பில் பிப்லப் குமார் தேப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்கு எம்.எல்.ஏ-வாக பதவி வகித்து வரும் தனஞ்ஜய் (27) என்பவருக்கும் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் நெருங்கி பழகிய தனஞ்செய், பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக இளம்பெண் ஒருவர் பொலிஸார் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதற்கிடையில் முன் ஜாமீன் கோரி தனஞ்செய் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவினை நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், தற்போது புகார் கொடுத்த இளம்பெண்னையே எம்.எல்.ஏ திருமணம் செய்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

இதனை உறுதி செய்துள்ள எம்.எல்.ஏ தரப்பு வழக்கறிஞர், இருதரப்பினரும் சமாதானமாகிக்கொண்டதால் வழக்கினை விரைவில் திரும்பப்பெற போவதாகவும் தெரிவித்துள்ளார்.