லண்டனில் நடந்த அதிசயம்!

பிரித்தானியாவை சேர்ந்த இளைஞரும், கனடாவை சேர்ந்த இளம்பெண்ணும் டேட்டிங் செயலி மூலம் நட்பான பின்னர் காதலர்களாகி தற்போது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

பிரித்தானியாவை சேர்ந்தவர் மார்க் லஸ்டட் (30). கனடாவை சேர்ந்த இளம்பெண் லீ உல்ரிட்ஜ் (29).

லீ கடந்த 2016-ல் பணி விடயமாக லண்டனுக்கு வந்தார். பின்னர் கனடாவுக்கு கிளம்ப அவர் லண்டன் விமான நிலையத்துக்கு வந்தார்.

அந்த சமயத்தில் லண்டனில் இருந்து பிரான்ஸுக்கு பணி விடயமாக மார்க் விமானத்தில் சென்றார்.

அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது, அதாவது Bumble என்ற டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்த லீ விமான நிலையத்தில் இருந்தபடியே மார்க்குடன் அதன் மூலம் நட்பானார்.

பின்னர் இருவரும் தினமும் அந்த செயலி மூலமே உரையாடி நெருங்கிய நட்பானார்கள்.

இதையடுத்து முதல் முறையாக லீயும், மார்க்கும் ஐஸ்லாந்தில் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் டேட்டிங் சென்றார்கள்.

இதற்கு பிறகு கனடாவுக்கு வருகை தந்த மார்க் லீயை அங்கு சந்திதார், இங்கு தான் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை மனதால் உணர்ந்தனர்.

மூன்றாம் முறையாக பாரீஸில் 2017 மார்ச்சில் இருவரும் சந்தித்து கொண்ட நிலையில் இருவர் குடும்பத்தாரும் பின்னர் நண்பர்கள் ஆனார்கள்.

அதை தொடர்ந்து 2018 தொடக்கத்தில் மோதிரத்தை லீயிடம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார் மார்க்.

அதை லீயும் ஏற்று கொள்ள கடந்தாண்டு செப்டம்பரில் கனடாவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது மகிழ்ச்சியான தம்பதியாக இருவரும் வாழ்கிறார்கள்.

லீ கூறுகையில், நாங்கள் இருவரும் 3,500 மைல்கள் ஒருவருக்கொருவர் தள்ளி வாழ்ந்து வந்த நிலையில் ஒன்றாக இணைந்துள்ளோம்.

இணையதளம் மூலம் 100 நாட்கள் பேசிய நிலையில் அதன்பின்னரே முதல் முறையாக சந்தித்து கொண்டோம்.

பல சமயத்தில் ஒருவரையொருவர் நாங்கள் அதிகம் மிஸ் செய்தாலும் அதுவே எங்களின் காதலை வலிமையாக்கியது.

இருவரும் பிரித்தானியாவில் வசிப்பதா அல்லது கனடாவில் வசிப்பதா என எங்களுக்குள் குழப்பம் இருந்தது.

ஆனால் எனக்கு தான் முதலில் பிரித்தானியா விசா கிடைத்தது, அதனால் கணவருடன் அங்கு வந்துவிட்டேன்.

சீனாவுக்கு சென்று அங்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியை செய்யலாம் என எங்களுக்கு யோசனை உள்ளது என கூறியுள்ளார்.